சாய்வு நாற்காலியில் அமர்ந்தபடி நற்செய்தியைப் பறைசாற்ற இயலாது. 

"எழுதல்", "நெருங்கிச் செல்லுதல்" "அச்சூழலைவிட்டு புறப்படுதல்" என்ற மூன்று செயல்பாடுகளில் கிறிஸ்தவர்களின் நற்செய்தி அறிவிப்புப் பணியின் பண்புகளைப் புரிந்துகொள்ளலாம். ஸ்தேவானின் மறைசாட்சிய மரணம் உருவாக்கிய இன்னல்கள், திருத்தூதர்களையும், சீடர்களையும், அவர்களுக்குப் பழக்கமானச் சூழலுக்கு அப்பால் செல்வதற்குத் தூண்டின. எந்த இடத்திற்கு நாம் செல்லவேண்டும், எத்தனை மக்களுக்குப் போதிக்கவேண்டும் என்று திட்டமிடுவது, நற்செய்தி அறிவிப்புப் பணி அல்ல, மாறாக, தூய ஆவியாரின் தூண்டுதலுக்கேற்றவாறு பணியாற்றுவதே, உண்மையான நற்செய்தி அறிவிப்புப் பணி.

மன்னித்து மறத்தல்:

கொலோ. 3:13 ஒருவரை ஒருவர் பொறுத்துக்கொள்ளுங்கள். ஒருவரைப்பற்றி ஒருவருக்கு ஏதாவது முறையீடு இருந்தால் மன்னியுங்கள். ஆண்டவர் உங்களை மன்னித்தது போல நீங்களும் மன்னிக்க வேண்டும்.

இனிய இல்லற வாழ்வில் தம்பதிகள் தங்கள் தவறுகளில் இருந்து பாடம் கற்றுக் கொள்ளுகிறார்கள்.

தவறுகளை நினைவில் வைத்து அதைக் குத்திக்காட்ட மாட்டார்கள்.

ஒருவர் ஒருவரை மன்னிப்பது குடும்பத்தில் கசப்பை மாற்றி மகிழ்ச்சியை உருவாக்கும் என்பதை நல்ல தம்பதிகள் அறிந்திருக்கிறார்கள்.

கேளுங்கள் பெற்றுக் கொள்வீர்கள்.

கடவுள் உங்கள் முன்னால் தோன்றி உங்களுக்கு வேண்டியதைக் கேளுங்கள் தருகிறேன் என்று சொன்னால் என்ன கேட்பீர்கள்? என்று ஆசிரியர் மாணவர்களிடம் கேட்டார். ஒரு மாணவன் எழுந்து நான் நிறையப் பணம் கேட்பேன் என்றான். ஆசிரியர் அவனிடம் நானா யிருந்தால் அறிவைக் கேட்பேன் என்று சொன்னார். அப்போது மாணவன் கூறினான் யார் யாருக்கு எது இல்லையோ அதைத்தான் கேட்பார்கள். ஆசிரியர் முகத்தில் ஈயாடவில்லை.

மலர்ந்துள்ள புதிய ஆண்டில் நீங்கள் ஆண்டவரிடம் எதைக் கேட்கப் போகிறீர்கள். கேளுங்கள் பெற்றுக் கொள்வீர்கள்.

நமது நேரத்தைப் பயனுள்ள முறையில் பயன்படுத்துவோம்.


நீங்கள் உறுதியாக உங்களின் வெற்றிக்காக நேர்மறையான விடையங்களைச் சிந்தித்து முன்னேறவேண்டும். சிறப்பானதை, உயர்வானதை, தூய்மையானதைச் சிந்திக்க ஆரம்பியுங்கள். எலிசா இறைவாக்கினரைப்போல் இரட்டிப்பானதை எதிர்பாருங்கள். உங்களின் ஆன்மீகக் கண்களால் வெற்றியைப் பார்த்தால், நீங்கள் வெற்றியைக் காண முடியும் என்பதே உண்மை. உங்களின் உள்ளத்தில் கடவுளின் வார்த்தைக்கூடாக உயர்வான வாழ்வை திரையில் பாருங்கள். அது உங்களின் வாழ்வாக மாற ஆரம்பிக்கும். கடவுளும் உங்களின் ஆன்மீகத் திரையில் என்ன பார்க்கிறீர்களோ அதையே உங்களுக்காக செயலாற்றவும் விரும்புகிறார்.
Thank you for contacting us. We will get back to you as soon as possible
Oops. An error occurred.
Click here to try again.