இல்லமெல்லாம் புது வாழ்வு பணி பயிற்சி.

- - - - -

இல்லம்தோறும் அருள் ஆட்சியை விதைப்போம்.

- - - - - 

நாம் புறப்பட்டுப் போக அழைக்கப்பட்டவர்கள்.

லூக்கா 10:3

புறப்பட்டுப் போங்கள்; ஓநாய்களிடையே ஆட்டுக் குட்டிகளை அனுப்புவதுபோல் உங்களை நான் அனுப்புகிறேன்.


திருத்தூதர் பணிகள் 1:8

ஆனால், தூய ஆவி உங்களிடம் வரும்போது நீங்கள் கடவுளது வல்லமையைப் பெற்று எருசலேமிலும் யூதேயா, சமாரியா முழுவதிலும் உலகின் கடையெல்லைவரைக்கும் எனக்குச் சாட்சிகளாய் இருப்பீர்கள்” என்றார்.


எருசலேம் என்பதை எமது இல்லத்தில் முதலில் ஆரம்பிப்பதாக கருதலாம்.


பாடம் ஒன்று


பரிசுத்த வேதாகமம்:

1. பரிசுத்த வேதாகமம் எத்தனை பிரிவுகளைக் கொண்டது?

2. பழைய ஏற்பாடு நூலை யார் பயன்படுத்துகிறார்கள்?

3. புதிய ஏற்பாடு நூலை யார் பயன்படுத்துகிறார்கள்?

4. பழைய ஏற்பாட்டு நூல் எதைக் கூறுகின்றது?

5. புதிய ஏற்பாட்டு நூல் எதைக் கூறுகின்றது?

6. பழைய ஏற்பாடு எத்தனை புத்தகங்களைக் கொண்டது?

7. பழைய ஏற்பாட்டு 46 நூல்களையும் எத்தனை பிரிவுகளில் அடக்கலாம்?

8. திருவிவிலியம் எழுதப்பட்ட காலத்தில் ஆசிரியர்கள் தம் நூல்களை அதிகாரங்களாகவும் வசனங்களாகவும் பிரித்து எழுதினார்களா?

9. திருவிவிலிய நூல்கள் எவ்வாறு திருவிவிலியமாக உருவாகியது?

10. திரு விவிலியத்தில் ழுதலில் தோன்றிய நூல் எதுவாக கருதப்படுகின்றது?

11. திருவிவிலியம் முதலில் எதில் எழுதப்பட்டது?

12. பரிசுத்த வேதாகமம் எந்த மொழியில் எழுதப்பட்டவை?

13. திரு விவிலியம் தொடக்கத்தில் எல்லோரும் வாசிப்பதற்கு கொடுக்கப்பட்டதா?

14. இறைவார்த்தை எம்முறைகளில் விளக்கிக் கூறப்பட்டது?

15. இறைவார்த்தையின் ஆசிரியர் யார்?

16. இறைவாக்கினர்கள் இறைவாக்குரைக்கும் போது அவர்கள் சமூகச் சூழலுக்குள் இருந்து அறிவித்தார்களா?

17. இறைவார்த்தைக்கு கலாச்சார, மொழி, பாரம்பரியம் இருக்கின்றதா?

18. திருச்சபையில் மறுமலர்ச்சி ஏற்பட்ட பின் எவ்வாறு இறைவார்த்தை அளிக்கும் விளக்கம் புரிந்துகொள்ளப்படுகின்றது?

19. திருச்சபையில் யார் இறைவார்த்தைக்கு விளக்கம்தர அனுமதிக்கப் படுகிறார்கள்?

20. செபவழிபாட்டில் இறைவார்த்தைக்கு பொதுநிலையினர் விளக்கம் தருவது முறையா?

21. மறுமலர்ச்சி மக்களின் வேதாகமத்தைப் பற்றிய புரிந்துணர்வு எவ்வகையானது?

செபம்:


செபம் என்றால் என்ன?


கடவுளுக்கும் எமக்கும் உள்ள உறவு செபமாகும்.

(உறவு-இருபக்க தொடர்பு)


பழைய ஏற்பாட்டில் எவ்வாறு செபித்தனர்?


ஆதாம் ஏவாள்

(கடவுளுடன் நேர்முக உறவு)


காயின், ஆபேல்

(பலி செலுத்தினர்)


நோவா, ஆபிரகாம், மோசே காலத்தில்

(கடவுள் பெசினார்)


ஆபிரகாம்

(பலிப்பீடம் எழுப்பினார்)

தொடக்க நூல் 13:18 ஆண்டவருக்கு ஒரு பலிபீடம் எழுப்பினார்.


மோசே கடவுளின் பெயரைக் கடவுளிடம் கேட்கிறார்.

விடுதலைப் பயணம் 3:13 மோசே கடவுளிடம், “இதோ! இஸ்ரயேல் மக்களிடம் சென்று உங்கள் மூதாதையரின் கடவுள் என்னை உங்களிடம் அனுப்பியுள்ளார் என்று நான் சொல்ல, ‘அவர் பெயர் என்ன?’ என்று அவர்கள் என்னை வினவினால், அவர்களுக்கு என்ன சொல்வேன்?” என்று கேட்டார். 14கடவுள் மோசேயை நோக்கி, “இருக்கின்றவராக இருக்கின்றவர் நானே” என்றார். மேலும் அவர், “நீ இஸ்ரயேல் மக்களிடம், ‘இருக்கின்றவர் நானே’ என்பவர் என்னை உங்களிடம் அனுப்பினார் என்று சொல்” என்றார்.15கடவுள் மீண்டும் மோசேயை நோக்கிப் பின்வருமாறு கூறினார்: “நீ இஸ்ரயேல் மக்களிடம், “உங்கள் மூதாதையரின் கடவுளாகிய ஆண்டவர் — ஆபிரகாமின் கடவுள், ஈசாக்கின் கடவுள், யாக்கோபின் கடவுள் — என்னை உங்களிடம் அனுப்பியுள்ளார்” என்று சொல். இதுவே என்றென்றும் என்பெயர்; தலைமுறை தலைமுறையாக என் நினைவுச் சின்னமும் இதுவே!


பொற்கன்று வழிபாடு:

விடுதலைப் பயணம் 32:3 அவ்வாறே, மக்கள் எல்லோரும் தங்கள் பொற் காதணிகளைக் கழற்றி, அவற்றை ஆரோனிடம் கொண்டு வர, 4அவரும் அவர்கள் கையிலிருந்து அவற்றைப் பெற்றுக் கொண்டு, உருக்கி, வார்ப்பு அச்சில் வடிவம் கொடுத்து, ஒரு வார்ப்புக் கன்றுக்குட்டியைச் செய்தார். அப்போது அவர்கள், “இஸ்ரயேலே! உன்னை எகிப்து நாட்டினின்று நடத்தி வந்த உன் தெய்வங்கள் இவையே” என்றனர். 5இதனைக் கண்ட ஆரோன் அதற்கு எதிரே ஒரு பலிபீடம் கட்டி, “நாளைய தினம் ஆண்டவரின் விழா” என்று அறிவித்தார். 6மறுநாள் அதிகாலையில் அவர்கள் எழுந்து எரிபலிகள் செலுத்தினர். நல்லுறவுப் பலிகளையும் கொண்டு வந்தனர். பின்னர், மக்கள் அமர்ந்து உண்டு குடித்தனர்; எழுந்து மகிழ்ந்து ஆடினர்.

7அப்போது ஆண்டவர் மோசேயை நோக்கி, “இங்கிருந்து இறங்கிப்போ. நீ எகிப்திலிருந்து நடத்திவந்த உன் மக்கள் தங்களுக்குக் கேடு வருவித்துக்கொண்டனர். 8நான் கட்டளையிட்ட நெறியிலிருந்து இதற்குள்ளாகவே விலகி அவர்கள் தங்களுக்கென ஒரு கன்றுக் குட்டியை வார்த்துக் கொண்டார்கள். அதற்கு வழிபாடு செய்து, பலியிட்டு, ‘இஸ்ரயேலே, எகிப்து நாட்டினின்று உன்னை நடத்தி வந்த தெய்வங்கள் இவையே’ என்று கூறிக் கொள்கிறார்கள்” என்றார். 9மேலும், ஆண்டவர் மோசேயிடம், “இம் மக்களை எனக்குத் தெரியும்; வணங்காக்கழுத்துள்ள மக்கள் அவர்கள். 10இப்போது என்னை விட்டுவிடு. அவர்கள்மேல் என் கோபக்கனல் மூண்டிருப்பதால் நான் அவர்களை அழித்தொழிக்கப் போகிறேன். உன்னையோ பேரினமாக்குவேன்” என்றார்.


சந்திப்புக் கூடாரம்:

விடுதலைப் பயணம் 40:34 பின்பு, மேகம் சந்திப்புக்கூடாரத்தை மூடிற்று; ஆண்டவரின் மாட்சி திருஉறைவிடத்தை நிரப்பிற்று.✠ 35சந்திப்புக்கூடாரத்தின் மேலே மேகம் நின்றிருந்ததாலும், ஆண்டவரின் மாட்சி திருஉறைவிடத்தை நிரப்பியதாலும் மோசே உள்ளே நுழைய முடியாமல் போயிற்று. 36இஸ்ரயேல் மக்கள் தங்கள் பயணத்தின் ஒவ்வொரு கட்டத்திலும், மேகம் திரு உறைவிடத்தைவிட்டு எழும்பும் போதெல்லாம் புறப்பட்டுச் செல்வார்கள். 37மேகம் எழும்பாதிருக்கும் போதோ, அது மேலே எழும்பும் நாள்வரை, அவர்கள் புறப்பட மாட்டார்கள். 38ஏனெனில், பயணத்தின் ஒவ்வொரு கட்டத்திலும் திருஉறைவிடத்தின்மேல் பகலில் ஆண்டவரின் மேகம் இருப்பதையும், இரவிலோ அதில் நெருப்பு இருப்பதையும் இஸ்ரயேல் வீட்டார் காண்பார்கள்.


குருத்துவ இறை வழிபாடு:

லேவியர் 8:12 ஆரோனின் தலையின்மேல் திருப்பொழிவு எண்ணெயில் கொஞ்சம் வார்த்து அவரைத் திருநிலைப்படுத்தும்படி அவருக்கு அருள்பொழிவு செய்தார். 13ஆண்டவரது ஆணைப்படி, மோசே ஆரோனின் புதல்வரை வரவழைத்து, அவர்களுக்குக் கோடிட்ட உள்ளாடைகளை உடுத்துவித்து, இடைக்கச்சைகளைக் கட்டித் தலையில் பாகை அணிவித்தார்.


புதிய ஏற்பாட்ல் செப அனுபவம்:

பரிசேயர், சதுசேயர், தலைமைக் குருக்களின் இறை வழிபாடு

(பழைய ஏற்பாட்டின் லேவியர் பாரம்பரியம்)


இயேசு கற்றுக்கொடுத்த செப வாழ்வு:

மத்தேயு 6:5“நீங்கள் இறைவனிடம் வேண்டும்பொழுது வெளிவேடக்காரரைப்போல் இருக்க வேண்டாம். அவர்கள் தொழுகைக்கூடங்களிலும் வீதியோரங்களிலும் நின்றுகொண்டு மக்கள் பார்க்க வேண்டுமென இறைவேண்டல் செய்ய விரும்புகிறார்கள். அவர்கள் தங்களுக்குரிய கைம்மாறு பெற்று விட்டார்கள் என உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன்.✠ 6ஆனால், நீங்கள் இறைவனிடம் வேண்டும் பொழுது உங்கள் உள்ளறைக்குச் சென்று, கதவை அடைத்துக் கொண்டு, மறைவாய் உள்ள உங்கள் தந்தையை நோக்கி வேண்டுங்கள். மறைவாய் உள்ளதைக் காணும் உங்கள் தந்தையும் உங்களுக்குக் கைம்மாறு அளிப்பார். 7மேலும், நீங்கள் இறைவனிடம் வேண்டும்பொழுது பிற இனத்தவரைப் போலப் பிதற்ற வேண்டாம்; மிகுதியான சொற்களை அடுக்கிக் கொண்டே போவதால் தங்கள் வேண்டுதல் கேட்கப்படும் என அவர்கள் நினைக்கிறார்கள். 8நீங்கள் அவர்களைப் போல் இருக்க வேண்டாம். ஏனெனில், நீங்கள் கேட்கும் முன்னரே உங்கள் தேவையை உங்கள் தந்தை அறிந்திருக்கிறார். 9ஆகவே, நீங்கள் இவ்வாறு இறைவனிடம் வேண்டுங்கள்: ‘விண்ணுலகிலிருக்கிற எங்கள் தந்தையே, 

உமது பெயர் தூயதெனப் போற்றப்பெறுக!


திருத்தூதர்கள் கால செப வாழ்வு:

(ஆலயத்திலும், வீட்டிலும்)

திருத்தூதர் பணிகள் 2:42அவர்கள், திருத்தூதர் கற்பித்தவற்றிலும் நட்புறவிலும் அப்பம் பிடுவதிலும் இறைவேண்டலிலும் உறுதியாய் நிலைத்திருந்தார்கள். 

திருத்தூதர் பணிகள் 2:46ஒவ்வொரு நாளும் அவர்கள் ஒரே மனத்தோடு கோவிலில் தவறாது கூடிவந்தார்கள்; பேருவகையோடும் எளிய உள்ளத்தோடும் வீடுகள் தோறும் அப்பத்தைப்பிட்டு, உணவைப் பகிர்ந்து உண்டு வந்தார்கள். 47அவர்கள் கடவுளைப் போற்றி வந்தார்கள்; 

திருத்தூதர் பணிகள் 3:1 ஒருநாள் இறைவேண்டல் செய்யும் நேரமாகிய பிற்பகல் மூன்று மணிக்குப் பேதுருவும் யோவானும் கோவிலுக்குச் சென்றனர். 


இயேசு கற்றுக்கொடுத்த செப அனுபவம் “அப்பா” அனுபவம்.

இதற்கே கத்தோலிக்க மறுமலர்ச்சியில் முக்கியம் தரப்படுகிறது.


“அப்பா” செப அனுபவம் எவ்வாறு கிடைக்கின்றது?

தூய ஆவியாரின் தூண்டுதலால் கிடைக்கின்றது.

உரோமையர் 8:15 மீண்டும் அச்சத்திற்கு உள்ளாக்கும் மனப்பான்மையை நீங்கள் பெற்றுக்கொள்ளவில்லை; மாறாகக் கடவுளின் பிள்ளைகளுக்குரிய மனப்பான்மையையே பெற்றுக் கொண்டீர்கள். அதனால் நாம், “அப்பா, தந்தையே” என அழைக்கிறோம்.

கலாத்தியர் 4:6 நீங்கள் பிள்ளைகளாய் இருப்பதால் கடவுள் தம் மகனின் ஆவியை உங்கள்* உள்ளங்களுக்குள் அனுப்பியுள்ளார்; அந்த ஆவி ‘அப்பா, தந்தையே’ எனக் கூப்பிடுகிறது.


“அப்பா” செப அனுபவம் புதிய ஆன்மீக அனுபவங்களைத் தருகின்றது.

(உள்ள உணர்வோடு செபிக்கும் செப அனுபவம்.

இறை தந்தையோடு இயேசு வழியாக நேராக தொடாபு கொள்ளும் செப அனுபவம்.

வாழ்வின் நிலை மற்றும் மன நிலையில் மாற்றம் ஏற்படும் செப அனுபவம்.

தூய ஆவியின் வரங்கள் செயலாற்றும் செப அனுபவம்.)


"அப்பா" செப அனுபவத்தில் வளரும் போது ஏற்படும் சவால்கள்.

(நாம் கத்தோலிக்கர்கள் அல்ல மாறாக மற்ற கிறிஸ்தவ சபைப் பிரிவைச் சார்ந்தவர்கள்.

திருச்சபையின் வழிநடத்துதலுக்கு கீழ்படியாதவர்கள்.)


இதை எவ்வாறு எமது குடும்பத்திலும், சமூகத்திலும் வளர்க்கப்போகிறோம்?

(பின்பு பார்க்கலாம்)


கத்தோலிக்க மக்களின் செப அனுபவம் என்ன?

(பக்தி மயற்சிகள்)


ஏன் பக்தி முயற்சிகளில் மக்கள் வளர்ந்திருக்கிறார்கள்?

(தூய ஆவியாரின் வழிநடத்துதலுக்கு பதிலாக நிறுவன அமைப்பு முக்கியத்துவம் பெற்றிருந்தது.

தலைமைத்துவ அதிகாரம் (hierarchy) 

பழைய ஏற்பாட்டு மற்றும் வரலாற்று பாரம்பரியங்களின் தொடர்நிலை.

பங்கு வளர்ச்சிக்கு இலகுவான முறை)


மறுமலர்ச்சி கத்தோலிக்க மக்கள் எதிர்கொள்ளும் சவால்கள்.

பக்தி முயற்சியா? அல்லது "அப்பா" அனுபவமா?


உங்களின் சிந்தனைக்கு:

இயேசு பக்தி முயற்சியையா அல்லது "அப்பா" அனுபவத்தையா கற்றுக்கொடுத்தார்.

திருத் தூதர்கள் மற்றும் முதல் நூற்றாண்டு கிறிஸ்தவர்களின் செப அனுபவம் என்ன?

பக்தி முயற்சி செபம் எவ்வாறு மக்களால் செய்யப்படுகின்றது? 

"அப்பா" அனுபவ செபம் எவ்வாறு மக்களால் செய்யப்படுகின்றது? 

பக்தி முயற்சி செபத்திற்கும், "அப்பா" அனுபவ செபத்திற்கும் உள்ள மாற்றங்கள் என்ன?

கத்தோலிக்க மக்கள் "அப்பா" அனுபவ செபத்தைவிட ஏன் பக்தி முயற்சி செபங்களை வரவேற்கிறார்கள்?

"அப்பா" அனுபவம் உங்கள் குடும்பத்திற்கு தேவையா?

அதை எவ்வாறு புரியக்கூடிய விதமாக உட்புகுத்தலாம்?