• அருட்தந்தை அல்பேர்ட் அடிகளாரை உமது குணமளிக்கும் வல்லமையால் நிறைத்து அவரது 46 வது வயதை ஆசீர்வதித்து கழுகைப் போல் புதிய பலத்துடன் பணிசெய்ய வைத்தீரே கோடி நன்றி அப்பா!
 • கர்பப்பைக்கட்டியால் சத்திரசிகிச்சை செய்யவேண்டிய நிலையில் தொடர்ச்சியான இரத்தப் போக்குடன் இருந்த பெண் சத்திரசிகிச்சையும் தேவையில்லை என்ற அற்புதசுகத்தை பெற்றுக் கொண்டதற்காக நன்றி இறைவா!
 • மஞ்சள்காமாலையுடன் உயிருக்குப் போராடிய Patricia புத்துயிர் பெற்று அற்புதமாக வீடு திரும்பியதற்காக ஆண்டவரே உமக்கே நன்றி

May-14-2021
 • அற்புத குணமளிக்கும் தேவா! அருட்தந்தை அல்பேர்ட் Covid -19 தாக்கத்தில் இருந்து வெகு விரைவில் அற்புத சுகமடைந்து மீண்டும் உமது பணி செய்யவும் மற்றும் இளம் சகோதரி ஒருவரும் பூரண குணமடையவும் சாந்தா பாண்டியனின் குடும்பத்தை சேர்ந்த நால்வர் வைத்தியசாலையில் இருந்து குணமடைந்து வீடு திரும்பவும் நீர் காட்டிய பெரிய இரக்கத்திற்காகவும், மற்றும் இவர்களையும் குணமடைந்த அனைவரையும் தொடர்ந்தும் உமது பாதுகாப்பில் வைத்திருந்து பலப்படுத்தி வழிநடத்த போகிறபடியாலும் உமக்கு நன்றி அப்பா!

May-12-2021
 • கடந்த புதன்கிழமை நடைபெற்ற சங்கிலித்தொடர் செபக்குழுவின் விண்ணப்ப வழிபாடு ஆசீர்வாதமாக நடைபெற்றதற்காகவும் அதில் பங்குபற்றிய அனைவருக்காகவும் வழிநடத்திய ஆண்டவரே, உமக்கே நன்றி ஐயா!
 • வேலைக்காக முயற்சி செய்து கொண்டிருந்த இளைஞனுக்கு வேலை கிடைத்ததற்காக இறைவா உமக்கு நன்றி!
 • உமது கரங்களின் வல்லமையால் இறைபணியாளர் கிறிஸ்துகுமாரை குணமாக்கி வீட்டிற்கு கொண்டு வந்து சேர்த்ததற்காக இறைவா உமக்கு நன்றி!
 • வேளாங்கண்ணியில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த வயதான தகப்பனார் பூரண குணமடைந்து வீடு திரும்பியதற்காக ஆண்டவரே உமக்கு நன்றி!

April-30-2021
 • Covid -19 பாதிப்புக்குள்ளாகி Bangalore வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த சகோதரன் குணமடைந்த வீடு திரும்பியதற்காக நன்றி கூறும் அதே வேளையில் Toronto வில் பாதிப்புக்குள்ளாகி இருந்த தாயாரும் 11 வயது பிள்ளைகளும் பூரண குணமடைந்து தமது கடமைகளை செய்யும்படி ஆசீர்வதித்ததற்காகவும் உமக்கு நன்றி கூறுகிறோம்.
 • காரணம் கண்டுபிடிக்கப்படாமல் கையில் வீக்கத்தோடும் வலியோடும் இருந்த இளம்பெண்ணுக்கு சுகம் கிடைத்ததற்காக நன்றி கூறுகிறோம்.

April-21-2021
 • யாழ். வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த சகோதரன் Janson சுகமடைந்து வீடு திரும்பியதற்காக ஆண்டவரே உமக்கு கூறுகிறோம்.
 • புற்றுநோய்க்கான பரிசோதனைகள் செய்த சகோதரிக்கு “புற்றுநோய் இல்லை” என்ற நல்ல பதிலைப் கொடுத்த இயேசு ஆண்டவரே உமக்கு நன்றி.
 • சகோதரிகளுக்கிடையில் ஏற்பட்ட பிணக்குகளைத் தீர்த்து இருகுடும்பங்களையும் மீண்டும் இணைத்து வைத்த கடவுளே உமக்கு நன்றி.

April-17-2021
 • குணமளிக்கும் இறைவா!சத்திர சிகிச்சை பலனளிக்காமல் கண்ணில் நீர்வடிந்தும் வெளிச்சத்தைப் பார்க்கவும் முடியாமல் இருந்த Casey என்ற தாயாருக்கு பூரண சுகம் கொடுத்ததற்காக உமக்கு நன்றி கூறுகிறோம்.
 • Alfred என்ற சகோதரனுக்கு சத்திரசிகிச்சை நல்லபடி நடந்து சுகம் தந்ததற்காகவும் உமக்கு நன்றி கூறுகிறோம் ஆண்டவரே!

April-07-2021
 • இந்த ஆண்டு உயிர்ப்பு ஞாயிறு திருப்பலி ஆலயங்களில் நிறைவேற்றப்பட வழிதிறந்த ஆண்டவரே உமக்கு நன்றி!
 • ஜேர்மனி நாட்டில் வேலையை இழந்த சகோதரனுக்கு அதே தொழிற்சாலையில் மீண்டும் வேலையைப் பெற்றுக் கொடுத்ததற்காக ஆண்டவரே உமக்கு நன்றி!

March-25-2021
 • Brian என்ற சகோதரன் COVID-19 இல் இருந்து பூரண சுகம் பெற்றதற்காக ஆண்டவரே உமக்கு நன்றி!
 • வேலைக்காக காத்திருந்த சகோதரனுக்கு எதிர்பார்த்ததை விட மிகச் சிறந்த வேலை கிடைத்ததற்காக இறைவா உமக்கு நன்றி!
 • அவுஸ்திரேலியா நாட்டில் (வயிற்றில்) சத்திர சிகிச்சை நடைபெற்ற சாவித்திரி என்னும் சகோதரிக்கு சிகிச்சை வெற்றியாய் நடந்து முடிந்ததிற்காக இறைவனுக்கு நன்றி கூறுகின்றோம்.