June-01-2021

 1. சகோதரி Florina வின் தகப்பனார் மூச்சுவிட மிகவும் சிரமப்பட்டுக் கொண்டு இருக்கிறார். ஏற்கனவே இருதய நோயுடன் இரண்டு கண்களும் பார்வையற்ற இவரை கொழும்பு வைத்தியசாலையில் அனுமதிப்பதிலும் சிக்கல்கள் இருக்கின்றது. ஆண்டவரின் இரக்கம் இந்த தகப்பனாரின் இறங்கி சுகப்படுத்த வேண்டுமாய் மன்றாடுவோம்.
 2. தொண்டையில் கட்டி இருப்பதால் வலியும் இரத்தக்கசிவும் உள்ள இளம்சகோதரி ஒருவர் சுகம் பெற மன்றாடுவோம்.
 3. குடும்பத்தில் ஏற்பட்ட சூழ்நிலைகளினால் ஆயத்தப்படுத்தப்பட்ட திருமணத்தை தள்ளிப் போட நினைக்கும் மகளின் திருமணத்தை உமது கைகளில் ஒப்புக் கொடுக்கிறோம் ஆண்டவரே! நீரே உடனிருந்து வழி நடத்தும்படியாக மன்றாடுகிறோம்.
 4. சிறு நீர் மற்றும் மலம் கழிக்கும்போது இரத்தம் வெளியேறும் நோயினால் பாதிக்கப்பட்டிருக்கும் சகோதரர் இயேசுவின் வல்லமையால் சுகமடைய வேண்டுமென இறைவா மன்றாடுகின்றோம்.
 • சங்கிலித்தொடர் செபத்தில் இணைந்திருக்கும் ஒவ்வொருவரும் எல்லா சூழ்நிலைகளிலும் உற்சாகத்தோடும் பரிசுத்த ஆவியின் நிறைவோடும் செபித்து இறை ஆசீரைப் பெற்று அதை பிறருக்கும் பகிர்ந்து கொள்பவர்களாக வாழ வேண்டும் என்று மன்றாடுவோம்.
 • திருப்பாடல்கள் 27:5 கேடுவரும் நாளில் அவர் என்னைத் தம் கூடாரத்தில் மறைத்து வைப்பார்;
 • சங்கிலித்தொடர் செப வீரர்கள் அனைவரையும், அவர்களின் குடும்பங்களையும் இறைவன் எல்லாவகை தீமையில் இருந்து பாதுகாத்து, அவர்கள் தேவைகளைச் சந்திக்க வேண்டுமென மன்றாடுவோம்.
 • திருச்சபைக்காகவும், செபக் குழுக்களுக்காகவும், இறைபணி செய்பவர்களுக்காகவும் முக்கியமாக திருப்பலி ஆராதனைகள், வழிபாடுகள் நடைபெறும் இடங்கள் மீண்டும் திறக்கப்பட வேண்டும் என்றும் மன்றாடுவோம்.
 • திருச்சி அருங்கொடை இல்லப் பணிகளுக்காவும், அதன் பொறுப்பாளர் (அருள் தந்தை. அல்பேட்), பணியாளர்கள் மற்றும் அவர்கள் குடும்பங்களுக்காவும் மன்றாடவும்.
 • Montreal-Canada செபக்குழுவிற்காகவும், அவர்களின் பணிகளுக்காவும் செபிக்கவும்.
 • கனடா-கத்தோலிக்க செபக்குழுவிற்காகவும், அதன் பொறுப்பாளர் (சகோ.யேசு தவறாஜன்), பணிகள், பணியாளர்கள் அனைவருக்காகவும் மற்றும் அவர்களின் குடும்பங்களுக்காவும் மன்றாடவும்.
 • விடுதலைப் பயணம் 35:21 உள்ளார்வம் உடையோர், உள்ளுணர்வால் உந்தப்பெற்றோர் அனைவரும் முன்வந்து சந்திப்புக் கூடார வேலைக்காகவும், அதிலுள்ள அனைத்துத் திருப்பணிகளுக்காகவும் திருவுடைகளுக்காகவும் ஆண்டவருக்குக் காணிக்கை கொடுத்தனர்.
 • எமது பணியை அன்பளிப்புகள் மூலம் தாங்கிவரும் அனைவருக்காகவும் மன்றாடவும்.
 • எமது செபக்குழுவில் உள்ள வயதானவர்கள் நல்சுகத்திடனும், குடும்பங்கள் கடவுள் நம்பிக்கையுடனும் மற்றும் பிள்ளைகள் இறை அருளோடும் ஆசீரோடும் வளர வேண்டுமென மன்றாடவும்.
 • செபக்குழுவில் உள்ள நோயாளிகள் சுகம் பெறவும், தேவைகளில் உள்ளவர்களின் தேவைகள் அனைத்தும் சந்திக்கட வேண்டுமென செபிக்கவும்.

குடும்பங்கள் யாவும் இறைநம்பிக்கையில் வளரவும் அன்பும் சமாதானமும் நிலைத்திருக்கவும் ஒவ்வொருவரினதும் தனிப்பட்ட தேவைகள், மன்றாட்டுக்களை ஆண்டவர்தாமே சந்திக்க வேண்டும் என்று மன்றாடுவோம்.

தொடக்க நூல் 7:1 அப்பொழுது ஆண்டவர் நோவாவிற்குக் கூறியது: “நீ உன் குடும்பத்தார் அனைவரோடும் பேழைக்குள் செல். ஏனெனில், இத்தலைமுறையில் உன்னையே நான் நேர்மையானவனாகக் காண்கிறேன்.

 • குடும்பங்கள் இயேசு என்னும் பேழைக்குள் வந்து மீட்படைய வேண்டுமென மன்றாடுவோம்.
 • குடும்பத் தலைவர்கள் கடவுளுக்கு ஏற்புடையவர்களாக வாழ வேண்டுமென மன்றாடுவோம்.

தொடக்க நூல் 24:40 அவர் உன்னோடு தம் தூதரை அனுப்பி உனது பயணத்தை வெற்றிபெறச் செய்வார். என் இனத்தாரிடையே, என் தந்தையின் குடும்பத்திலிருந்து என் மகனுக்குப் பெண்கொள்வாய்.

 • குடும்பத்தில் திருமண வயதில் உள்ள பிள்ளைகளுக்கு நல்ல திருமண வாழ்க்கைக்காக மன்றாடுவோம்.
 • கொன்றொழிக்கும் கொள்ளை நோயிலிருந்தும் எங்களைத் தப்புவிக்க வல்லவரே! உம் வார்த்தைகளை அனுப்பி குணப்படுத்தி அழிவிலிருந்து விடுவிக்கிற ஆண்டவரே! புயற்காற்றை பூந்தென்றலாக மாற்றி அலைகளை ஓயப்பண்ணுகிறவரே! காற்றையும் கடலையும் அடக்கிய வல்லமை மிக்க ஆண்டவரான இயேசுவே! நாம் வாழும் கனடா தேசமும் இலங்கை, இந்தியா,அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகள் மட்டுமன்றி இன்னும் பல நாடுகளும் வைரசுகளின் தாக்கத்தால் தடுமாறிக் கொண்டிருக்கின்றன. எங்கெல்லாம் வைரஸ் தீவிரமாக இருக்கிறதோ அங்கெல்லாம் உமது பாதுகாக்கும் கரம் இறங்கி வந்து மக்களை பாதுகாக்க வேண்டும் என்று மன்றாடுகில் வைத்தியசாலைகளில் பணிபுரியும் வைத்தியர்கள், தாதியர்கள், பணியாளர்களுக்காய் நன்றி சொல்லி உமது கரங்களில் தருகிறோம் அப்பா! இவர்களுக்கு நல்ல உடல்பலத்தையும் மனபலத்தையும் ஞானத்தையும் நிறைவாக கொடுத்து பாதுகாத்து கொள்ளங்கப்பா! வைத்தியசாலைகளில் உள்ள ஒவ்வொரு நோயாளிகள், உபகரணங்கள், மருந்துகள், படுக்கைகள் மேலும் உமது திருரத்தத்தை தெளிக்கிறோம். உமது திருஇரத்தத்திற்கு மேலான பாதுகாப்பு எதுவுமில்லை என்ற முழுநம்பிக்கையோடு”இயேசுவின் இரத்தம் ஜெயம்” என்று அறிக்கை செய்து மன்றாடுகிறோம்.
 • தீங்கு நாளில் உமது கூடாரத்தில் எம்மை மறைத்து வைத்திருப்பவரே! முதியோர் இல்லங்கள்,தொழிற்சாலைகள், உணவகங்கள் மற்றும் அத்தியாவசிய சேவைகள் நடைபெறும் ஒவ்வொரு இடங்களையும் அதில் பணிபுரிவோரையும் அவர்களது குடும்பங்களையும் நீரே பாதுகாக்க வேண்டும் என்று மன்றாடுகிறோம்.
 • நீர் தந்திருக்கிற ஒவ்வொரு தடுப்பூசிகளுக்காக உமக்கு நன்றி ஆண்டவரே! தடுப்பூசிகளை பெற்றுக்கொள்ளும் அனைவரும் இந்த வைரசிலிருந்து பூரண பாதுகாப்பைப் பெற்றுக் கொள்ளவும் தடுப்பூசிகள் எதிர்பார்ப்பதை விட சிறந்த பலனை கொடுக்கவும் நீர் இரக்கம் செய்ய வேண்டும் என்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.
 • COVID-19 இன் இழப்புக்களை கண்டு வேதனையடைந்து வேலையை விட்டு விலகிய இளம்பெண் வைத்தியர் மனவலிமை பெற்று மீண்டும் பணிக்குத் திரும்ப வேண்டும் என மன்றாடுவோம்.
 • கனடாவில் தீய ஆவியின் தொல்லையால் துயரப்படும் குடும்பம் விரைவில் விடுவிக்கப்பட்டு ஆண்டவரின் பாதுகாப்புக்குள் வர மன்றாடுவோம்.
 • நிராஜ் , அனிதா என்கிற இரண்டு பிள்ளைகள் 4 வயதாகியும் இன்னமும் நடக்கவும் பேசவும் முடியாமல் இருக்கிறார்கள். வாய் பேசாதவர்களைப் பேச வைத்து நடக்க முடியாதவர்களை நடக்க வைத்த ஆண்டவரின் வல்லமை இவர்களைக் குணப்படுத்தி அற்புதம் செய்ய வேண்டும் என மன்றாடுவோம்.
 • கனடா வருவதற்கான விசாவிற்காக காத்திருப்பவர்களுக்காக விரைவில் விசாவைப் பெற்றுக்கொள்ள மன்றாடுவோம்
 • ஒடுக்கப்பட்ட மக்களுக்கு உரிமைகளை வழங்கும் இறைவா! வெளிநாடுகளில் அகதிஉரிமை நிராகரிக்கப்பட்ட நிலையில் உள்ளவர்களுக்கு அந்தந்த நாடுகளில் நிரந்தரமாக வாழ்வதற்கு வேண்டிய வதிவிட உரிமை கிடைக்க வேண்டும் என மன்றாடுவோம்.
 • அநியாயமாக குற்றம் சாட்டப்பட்டு பல ஆண்டுகளாக சிறையில் இருக்கும் இளைஞன் விரைவில் விடுதலை பெறவும் அத்தோடு எமது தாயகத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்களின் விடுதலைக்காகவும் மன்றாடவும்.
 • COVID-19 இன் தாக்கத்தினால் ஏற்பட்டுள்ள உடல், மன, பொருளாதார நெருக்கடியில் இருந்து யாவரும் விடுபட்டு இயல்பு வாழ்வுக்குத் திரும்பி புத்துணர்வோடு வாழ வேண்டிய வரத்தை இறைவன் அருள மன்றாடுவோம்.
 • வைரஸ் தொற்றினால் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டவர்கள், தங்கள் அன்புக்குரியவர்களை இழந்தவர்கள் அனைவரும் ஆண்டவரின் ஆறுதலையும் பெலத்தையும் குணப்படுத்தலையும் பெற்றுக் கொள்ள மன்றாடுவோம்.
 • அரசாங்கங்கள் மக்களுக்கு ஏற்றதான நல்ல திட்டங்களை செயற்படுத்தவும், இன்றைய தலைமுறையை சீரழிக்கும்ட தவறான வழிகளை ஊக்கப்படுத்தும் சட்டங்கள் நீக்கப்படவும் வேண்டி மன்றாடுவோம்.
 • இளம் சமுதாயத்தினர் தங்கள் பாவ வழிகளை விட்டு மனம்திரும்பி இறைநம்பிக்கையும் கீழ்ப்படிவும் உள்ளவர்களாக மாற்றப்பட வேண்டும் என்று மன்றாடுவோம்.
 • நீதிமொழிகள் 22:6 நல்வழியில் நடக்கப் பிள்ளையைப் பழக்கு; முதுமையிலும் அவர் அந்தப் பழக்கத்தை விட்டு விடமாட்டார் என்றபடி பிள்ளைகள் நல்வழியில் நடக்க மன்றாடுவோம்.
 • விடுதலைப் பயணம் 20:12 உன் வாழ்நாள்கள் நீடிக்கும்படி, உன் தந்தையையும் உன் தாயையும் மதித்து நட என்றபடி குடும்பத்தில் பிள்ளைகள் பெற்றோரை மதித்தும், அன்பு செய்தும் வாழ வேண்டுமென மன்றாடுவோம்.
 • வேலை மாற்றம் செய்யவேண்டிய சூழ்நிலையில் இருக்கும் கணவன் மனைவிக்கு இருக்கும் தடைகள் நீங்கி அவர்கள் முயற்சிக்கும் தடைகள் நீங்கி அவர்கள் எதிர்பார்க்கும் வேலை கிடைக்க வேண்டும் என மன்றாடுவோம்.
 • ஈரல் சம்பந்தப்பட்ட நோயினால் பாதிக்கப்பட்டுள்ள தாயார் ஒருவர் குணமடைய வேண்டுமாய் மன்றாடுவோம்.
 • நீரிழிவு நோய் காரணமாக கால்விரல்கள் நீக்கப்பட்ட தகப்பனார் குணமடையவும் அவருடைய கால்கள் பாதுகாக்கப்பட்டு சுகமாக வாழவேண்டும் என மன்றாடுவோம்.
 • இளம்பெண் ஒருவர் வேண்டாத நண்பர்கள், பழக்கவழக்கங்களை விட்டு பெற்றோருக்கு கீழ்ப்படிந்து நல்ல எதிர்காலத்தைப் பெற வேண்டும் என்றும் அத்தோடு இளம்பெண்பிள்ளைகள் எல்லோருக்காகவும் மன்றாடுகிறோம்.
 • நோயுற்றவருக்கு மருத்துவரானவரே! Hailey என்ற 19 வயது இளம்பெண்ணுக்கு உடலில் இருந்த கட்டியை நீக்குவதற்காக ஆறு மணிநேர சத்திரசிகிச்சை நடைபெற்றுள்ளது. இந்த சத்திரசிகிச்சை இவருக்கு நல்ல பலன் கொடுத்து நிறைவான ஆரோக்கியத்தை Hailey பெற்றுக்கொள்ள மன்றாடுகிறோம்.
 • Aiden இன் பெற்றோரும், சகோதரர்களும், உறவினர் அனைவரும் Aiden இன் இழப்பினால் ஆறாத துயரத்தின் மத்தியில் தவித்துக் கொண்டிருக்கும் இந்த வேளையில் உமது அரவணைக்கும் கரங்கள் அனைவரையும் ஆறுதல்படுத்த வேண்டுமாய் மன்றாடுகிறோம்.
 • சமாதானத்தின் இறைவா! இஸ்ரயேல் தேசத்திற்கும் பாலஸ்தீன தேசத்திற்கும் இடையில் மீண்டும் போர் மேகங்கள் சூழ்ந்திருக்கும் வேளையில் நீர் பொதுமக்களின் தலைக்கு கவசமாக இருந்து பாதுகாக்க வேண்டும் என்றும் நிரந்தர சமாதான சூழ்நிலையை அந்த தேசங்களுக்கு கொடுக்க வேண்டும் என்றும் மன்றாடுகின்றோம்.
 • அனைத்து மக்களையும் மீட்க வந்த இயேசுவே! பல்வேறு நாடுகளில் வாழ்ந்து கொண்டிருக்கும் எமது தமிழ்மக்கள் பலர் மன உளைச்சலுக்கு உள்ளான நிலையில் இழப்புக்கள் துயரங்களை சந்தித்து கொண்டிருக்கிறார்கள். வாழ்வை அழிக்கும் சம்பவங்களில் இருந்து ஒவ்வொருவரையும் பாதுகாத்து உமது அன்பை சுவைக்கும் அனுபவத்தை பெற்றுக்கொள்ள வரமருள வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.
 • மகப்பேற்றுக்கு காரணமான சர்வ வல்லமையுள்ள ஆண்டவரே! கருவுற்றிருக்கும் தாய்மார் யாவரையும் உமது திருக்கரத்தில் முற்றுமுழுதாக ஒப்புக் கொடுக்கிறோம். சூழ்நிலைகள் எப்படியாக இருந்தாலும் நீர் இவர்களுக்கு சரியான நேரத்தில் நல்ல சுகப்பிரசவத்தை கட்டளையிட வேண்டும் என்றும் பூரண ஆரோக்கியமுள்ள குழந்தைகள் பிறக்க அருள் புரியவேண்டும் என்றும் தகப்பனே உம்மிடம் மன்றாடுகிறோம்.
  • அரசாங்கங்கள் மக்களுக்கு ஏற்றதான நல்ல திட்டங்களை செயற்படுத்தவும், இன்றைய தலைமுறையை சீரழிக்கும்ட தவறான வழிகளை ஊக்கப்படுத்தும் சட்டங்கள் நீக்கப்படவும் வேண்டி மன்றாடுவோம்.
  • இளம் சமுதாயத்தினர் தங்கள் பாவ வழிகளை விட்டு மனம்திரும்பி இறைநம்பிக்கையும் கீழ்ப்படிவும் உள்ளவர்களாக மாற்றப்பட வேண்டும் என்று மன்றாடுவோம்.
  • நீதிமொழிகள் 22:6 நல்வழியில் நடக்கப் பிள்ளையைப் பழக்கு; முதுமையிலும் அவர் அந்தப் பழக்கத்தை விட்டு விடமாட்டார் என்றபடி பிள்ளைகள் நல்வழியில் நடக்க மன்றாடுவோம்.
  • விடுதலைப் பயணம் 20:12 உன் வாழ்நாள்கள் நீடிக்கும்படி, உன் தந்தையையும் உன் தாயையும் மதித்து நட என்றபடி குடும்பத்தில் பிள்ளைகள் பெற்றோரை மதித்தும், அன்பு செய்தும் வாழ வேண்டுமென மன்றாடுவோம்.

 • கொன்றொழிக்கும் கொள்ளை நோயிலிருந்தும் எங்களைத் தப்புவிக்க வல்லவரே! உம் வார்த்தைகளை அனுப்பி குணப்படுத்தி அழிவிலிருந்து விடுவிக்கிற ஆண்டவரே! புயற்காற்றை பூந்தென்றலாக மாற்றி அலைகளை ஓயப்பண்ணுகிறவரே! காற்றையும் கடலையும் அடக்கிய வல்லமை மிக்க ஆண்டவரான இயேசுவே! நாம் வாழும் கனடா தேசமும் இலங்கை, இந்தியா,அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகள் மட்டுமன்றி இன்னும் பல நாடுகளும் வைரசுகளின் தாக்கத்தால் தடுமாறிக் கொண்டிருக்கின்றன. எங்கெல்லாம் வைரஸ் தீவிரமாக இருக்கிறதோ அங்கெல்லாம் உமது பாதுகாக்கும் கரம் இறங்கி வந்து மக்களை பாதுகாக்க வேண்டும் என்று மன்றாடுகில் வைத்தியசாலைகளில் பணிபுரியும் வைத்தியர்கள், தாதியர்கள், பணியாளர்களுக்காய் நன்றி சொல்லி உமது கரங்களில் தருகிறோம் அப்பா! இவர்களுக்கு நல்ல உடல்பலத்தையும் மனபலத்தையும் ஞானத்தையும் நிறைவாக கொடுத்து பாதுகாத்து கொள்ளங்கப்பா! வைத்தியசாலைகளில் உள்ள ஒவ்வொரு நோயாளிகள், உபகரணங்கள், மருந்துகள், படுக்கைகள் மேலும் உமது திருரத்தத்தை தெளிக்கிறோம். உமது திருஇரத்தத்திற்கு மேலான பாதுகாப்பு எதுவுமில்லை என்ற முழுநம்பிக்கையோடு”இயேசுவின் இரத்தம் ஜெயம்” என்று அறிக்கை செய்து மன்றாடுகிறோம்.
 • தீங்கு நாளில் உமது கூடாரத்தில் எம்மை மறைத்து வைத்திருப்பவரே! முதியோர் இல்லங்கள்,தொழிற்சாலைகள், உணவகங்கள் மற்றும் அத்தியாவசிய சேவைகள் நடைபெறும் ஒவ்வொரு இடங்களையும் அதில் பணிபுரிவோரையும் அவர்களது குடும்பங்களையும் நீரே பாதுகாக்க வேண்டும் என்று மன்றாடுகிறோம்.
 • நீர் தந்திருக்கிற ஒவ்வொரு தடுப்பூசிகளுக்காக உமக்கு நன்றி ஆண்டவரே! தடுப்பூசிகளை பெற்றுக்கொள்ளும் அனைவரும் இந்த வைரசிலிருந்து பூரண பாதுகாப்பைப் பெற்றுக் கொள்ளவும் தடுப்பூசிகள் எதிர்பார்ப்பதை விட சிறந்த பலனை கொடுக்கவும் நீர் இரக்கம் செய்ய வேண்டும் என்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.
 • COVID-19 இன் இழப்புக்களை கண்டு வேதனையடைந்து வேலையை விட்டு விலகிய இளம்பெண் வைத்தியர் மனவலிமை பெற்று மீண்டும் பணிக்குத் திரும்ப வேண்டும் என மன்றாடுவோம்.
 • கனடாவில் தீய ஆவியின் தொல்லையால் துயரப்படும் குடும்பம் விரைவில் விடுவிக்கப்பட்டு ஆண்டவரின் பாதுகாப்புக்குள் வர மன்றாடுவோம்.
 • நிராஜ் , அனிதா என்கிற இரண்டு பிள்ளைகள் 4 வயதாகியும் இன்னமும் நடக்கவும் பேசவும் முடியாமல் இருக்கிறார்கள். வாய் பேசாதவர்களைப் பேச வைத்து நடக்க முடியாதவர்களை நடக்க வைத்த ஆண்டவரின் வல்லமை இவர்களைக் குணப்படுத்தி அற்புதம் செய்ய வேண்டும் என மன்றாடுவோம்.
 • கனடா வருவதற்கான விசாவிற்காக காத்திருப்பவர்களுக்காக விரைவில் விசாவைப் பெற்றுக்கொள்ள மன்றாடுவோம்
 • ஒடுக்கப்பட்ட மக்களுக்கு உரிமைகளை வழங்கும் இறைவா! வெளிநாடுகளில் அகதிஉரிமை நிராகரிக்கப்பட்ட நிலையில் உள்ளவர்களுக்கு அந்தந்த நாடுகளில் நிரந்தரமாக வாழ்வதற்கு வேண்டிய வதிவிட உரிமை கிடைக்க வேண்டும் என மன்றாடுவோம்.
 • அநியாயமாக குற்றம் சாட்டப்பட்டு பல ஆண்டுகளாக சிறையில் இருக்கும் இளைஞன் விரைவில் விடுதலை பெறவும் அத்தோடு எமது தாயகத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்களின் விடுதலைக்காகவும் மன்றாடவும்.
 • COVID-19 இன் தாக்கத்தினால் ஏற்பட்டுள்ள உடல், மன, பொருளாதார நெருக்கடியில் இருந்து யாவரும் விடுபட்டு இயல்பு வாழ்வுக்குத் திரும்பி புத்துணர்வோடு வாழ வேண்டிய வரத்தை இறைவன் அருள மன்றாடுவோம்.
 • வைரஸ் தொற்றினால் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டவர்கள், தங்கள் அன்புக்குரியவர்களை இழந்தவர்கள் அனைவரும் ஆண்டவரின் ஆறுதலையும் பெலத்தையும் குணப்படுத்தலையும் பெற்றுக் கொள்ள மன்றாடுவோம்
 • எமது சங்கிலித்தொடர் செபத்தில் ஐரோப்பாவில் இருந்து இணைந்துள்ள சகோதரி ஒருவருக்கும் கனடாவிலிருக்கும் சகோதரன் ஒருவருக்கும் நீண்டநாட்களாக பல மருத்துவங்கள் செய்தும் குணமடையாமல் இருக்கும் சளி இருமலில் இருந்து பூரண குணமடைய மன்றாடுவோம்.
 • காயங்களுகளைக் கட்டும் கடவுளே! கீழே விழுந்ததால் வலக்கை முறிந்து சத்திரசிகிச்சை செய்யப்பட்ட சகோதரிக்கு எலும்புகள் சரியாக பொருந்தி மீண்டும் தன்குடும்ப கடமைகளை செய்ய உதவி செய்ய வேண்டும் என்றும் வீட்டில் சமாதானம் நிலைத்திருக்க வேண்டும் என்றும் இறைவா உம்மிடம் வேண்டுகிறோம்.
 • 18 வயது மகள் திடீரென ஏற்பட்ட நெஞ்சுவலியால் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் வேளையில் வைத்தியர்கள் 3 நாட்களுக்கு பின்பே அவரின் உடல்நிலை பற்றிய கருத்தை தெரிவிப்பதாக கூறி உள்ளார்கள். இந்நிலையில் ஆண்டவர்தாமே கூட இருந்து வழிநடத்தி சுகமாக வீடு திரும்பும்படி செய்ய வேண்டுமாயின் மன்றாடுவோம்.
 • தாயை இழந்து நிற்கும் சிறுமியின் எதிர்காலம் ஆண்டவரின் அன்பிலும் அரவணைப்பிலும் பாதுகாக்கப்பட்டு சிறப்பாக அமைய வேண்டும் என மன்றாடுவோம்.
 • குணரட்ணம் ஜோசப் என்ற தகப்பனாருக்கு எதிர்வரும் வெள்ளிக்கிழமை நடக்க இருக்கும் இருதய சத்திரசிகிச்சை வெற்றிகரமாக நடந்து சுகம் கிடைக்க வேண்டும் என குணமளிக்கும் ஆண்டவரிடம் மன்றாடுவோம்.
 • இரு தோள் மூட்டுக்களிலும் தீராத வலி உள்ளதால் ஊசிமருந்து தொடர்ந்து ஏற்றிக்கொண்டு இருக்கும் சகோதரிக்கு சுகம் கிடைக்க வேண்டும் என இறைவா உம்மை மன்றாடுகிறோம்
 • எனது இறக்கைகளின் கீழே ஆரோக்கியம் இருக்கும் என்ற பரம வைத்தியரே!
 • திடீரென ஏற்பட்ட நெஞ்சுவலி காரணமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட இளம்சகோதரன் உடனடியாக இருதய சத்திரசிகிச்சை செய்ய வேண்டிய சூழ்நிலையில் இருக்கிறார். நீர்தாமே அவருக்கு வைத்தியராக இருந்து சத்திரசிகிச்சையை நல்லபடி நடத்தி அவரைப் பூரண சுகத்துடன் வீடு திரும்பச் செய்ய வேண்டுமென உம்மிடம் இரந்து மன்றாடுகிறோம் அப்பா!
 • மன அமைதியின் ஊற்றே! மன நலக்குறைவுள்ள இளம்பெண் ஒருவருக்கு உடல்நலக்குறைவும் ஏற்பட்டுள்ள வேளையில் நீர்தாமே மனமிரங்கி குணப்படுத்த வேண்டும் என்று மன்றாடுகிறோம்.
 • இரண்டு கால்களிலும் கட்டி உள்ள சகோதரனுக்கு கட்டிகள் மறைந்து பரிபூரண சுகம் கிடைக்க வேண்டும் என மன்றாடுவோம்.

 • ‼️ஜேர்மனி நாட்டில் அகதி அந்தஸ்து நிராகரிக்கப்பட்ட எமது மக்களில் சிலர் நேற்று இலங்கைக்கு திருப்பி அனுப்பப்பட்டு இருக்கிறாரகள். இன்னும் பலர் திருப்பி அனுப்பப்படுவதற்காக வெவ்வேறு இடங்களில் தடுத்து வைக்கப்பட்டு உள்ளார்கள். இலங்கைக்கு அனுப்பப்பட்டவர்கள் எந்தவித பிரச்சனையும் இல்லாமல் தங்கள் சொந்த இடங்களுக்கு சென்றடைய வேண்டும் என்றும் ஜேர்மனியில் தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்கள் விடுவிக்கப்பட்டு நிரந்தர வதிவுரிமை பெற்றுக் கொள்ள வேண்டும் என்றும் உருக்கமாக மன்றாடுவோம்‼️
 • புற்றுநோய் பாதிப்பு 3ம் கட்ட நிலையில் உள்ள Laura என்கிற இரு குழந்தைகளின் தாயார் பூரண குணமடையவும் அவரது தந்தை David இருதயநோயினின்று குணம் பெறவும் மன்றாடுவோம்.
 • COVID-19 இன் இழப்புக்களை கண்டு வேதனையடைந்து வேலையை விட்டு விலகிய இளம்பெண் வைத்தியர் மீண்டும் பணிக்கு திரும்ப வேண்டும் என மன்றாடுவோம்.
 • வீடு வாங்குவதற்காக மிகுந்த பிரயாசப்படும் இளம் தம்பதியினருக்கு விரைவில் வீடு கிடைக்க வேண்டும் என மன்றாடுவோம்.
 • முகத்தில் தேமல் படர்ந்திருக்கும் குடும்பஸ்தர் ஒருவருக்கு பூரண சுகம் கிடைக்கவும் உடலில் கரும்புள்ளிகள் உள்ள ஒருவருக்கு அவைகள் மறைந்து தோல் புதுப்பொலிவு பெறவும் மன்றாடுவோம்.
 • உடன்பிறந்த சகோதரிகளுக்கிடையே இருக்கின்ற மனவேற்றுமைகள், கருத்து வேறுபாடுகள் மறைந்து குடும்பத்தில் சமாதானமும் சகோதர அன்பும் மேலோங்க வேண்டுமென மன்றாடுவோம்.

 • நிராஜ் , அனிதா என்கிற இரண்டு பிள்ளைகள் 4 வயதாகியும் இன்னமும் நடக்கவும் பேசவும் முடியாமல் இருக்கிறார்கள். வாய் பேசாதவர்களைப் பேச வைத்து நடக்க முடியாதவர்களை நடக்க வைத்த ஆண்டவரின் வல்லமை இவர்களைக் குணப்படுத்தி அற்புதம் செய்ய வேண்டும் என மன்றாடுவோம்.
 • ‼️சிறுநீரக(kidney)மாற்று சத்திரசிகிச்சை செய்ய வேண்டிய சூழ்நிலையில் தவித்துக் கொண்டு இருக்கும் சகோதரனுக்கு பொருத்தமான சிறுநீரகம் விரைவில் கிடைக்கவும் அவரது சத்திரசிகிச்சை வெற்றியாக நடக்கவும் மன்றாடுவோம்.‼️
 • வைத்திய பரிசோதனைகள் பல செய்தும் காரணம் கண்டுபிடிக்கப்படாமல் வலது கையில் வீக்கமும் நோவும் இருப்பதால் கஷ்டப்படும் இளம்பெண்ணுக்கும், வயிற்றுக்குள் தசை வளரந்துள்ள இன்னொரு வாலிப மகளுக்கும் பூரண சுகம் கிடைக்க வேண்டும் என்றும் மன்றாடுவோம்.
 • எமது செபக்குழுவில் உள்ள Florina(Amy) தைரோயிட் பிரச்சனையால் மிகவும் பலவீனமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு வீடு திரும்பியுள்ள நிலையில் அவர் பூரண குணமடைய வேண்டும் என மன்றாடுவோம்.
 • ஒடுக்கப்பட்ட மக்களுக்கு உரிமைகளை வழங்கும் இறைவா! வெளிநாடுகளில் அகதிஉரிமை நிராகரிக்கப்பட்ட நிலையில் உள்ளவர்களுக்கு அந்தந்த நாடுகளில் நிரந்தரமாக வாழ்வதற்கு வேண்டிய வதிவிட உரிமை கிடைக்க வேண்டும் என மன்றாடுவோம்.

 • நீர் தந்திருக்கிற ஒவ்வொரு தடுப்பூசிகளுக்காக உமக்கு நன்றி ஆண்டவரே! தடுப்பூசிகளை பெற்றுக்கொள்ளும் அனைவரும் இந்த வைரசிலிருந்து பூரண பாதுகாப்பைப் பெற்றுக் கொள்ளவும் தடுப்பூசிகள் எதிர்பார்ப்பதை விட சிறந்த பலனை கொடுக்க உமது அற்புத குணமாக்கும் வல்லமை தடுப்பூசிகளில் நிறைவாக இருக்க வேண்டும் என்றும், உலக மக்கள் அனைவரும் இழந்து போன சமாதானம், சந்தோஷத்தை வெகு விரைவில் இரட்டிப்பாக பெற்றுக்கொள்ள வேண்டும் என்றும் இறைவா உம்மை மன்றாடுகிறோம்.‼️‼️‼️
 • Bangalore இல் இருக்கும் சகோதரன் ஒருவர் COVID-19 பாதிக்கப்பட்டிருக்கிறார். அவர் நல்லபடி குணமடைய வேண்டுமென மன்றாடுவோம்.
 • அமெரிக்காவில் உள்ள 9 வயது சிறுவன் மூளையில் உள்ள கட்டியாலும் வலிப்பு வியாதியாலும் பாதிக்கப்பட்டுள்ளான். இவருக்கு செய்யப்படுகிற சிகிச்சைகள் ஒவ்வொன்றிலும் கடவுளின் கரம் கூட இருந்து விரைவில் பூரண சுகம் கிடைக்க வேண்டும் என மன்றாடுவோம்.
 • நரம்பு சம்பந்தப்பட்ட பிரச்சனை காரணமாக யாழ்ப்பாணம் பெரிய ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ள ஜான்சன் என்ற சகோதரன் பூரண குணமடைய ஆண்டவரை நோக்கி மன்றாடுவோம்.
 • வல்லமையின் ஆண்டவரான இயேசுவே! எசேக்கியா அரசனுக்கு ஆயுளைக் கூட்டி கொடுத்தவர் நீர்! லாசரை உயிர்ப்பித்தவர் நீர்! உம்மாலே முடியாத காரியம் ஒன்றுமில்லை! அதேபோல் புற்றுநோயினால் பாதிக்கப்பட்டு வைத்தியரால் கைவிடப்பட்டிருக்கும் 9 வயது சிறுவன் Aiden உமது வல்லமையால் அற்புதமாக குணப்படுத்தப்பட வேண்டும் ஒருமனப்பட்டு மன்றாடுகிறோம். ஆமென்!
 • சிறுவன் Aiden விரைவில் சுகமடைய எல்லோரும் ஊக்கமாக மன்றாடுவோம்.‼️
 • மீன் முள்ளு காலில் குத்தியதால் கால் வீங்கி கைகால் விறைப்புடன் 4 மாதங்களாக பல வைத்தியங்கள் செய்தும் சரியான பலன் கிடைக்காமல் தொழிலுக்கும் போக முடியாமல் கஷ்டப்படும் இளம்தகப்பன் ஒருவர் குணமடைய மன்றாடுவோம்.
 • மிகவும் சுகவீனமுற்று சுயநினைவற்ற நிலையில் படுத்த படுக்கையில் இருக்கும் வயது முதிர்ந்த தாயார் ஒருவர் ஆண்டவரின் இரக்கத்தையும் அரவணைப்பையும் பெற வேண்டுமென மன்றாடுவோம்.

 • உமது பணிசெய்பவர்களின் நல்வாழ்வை விரும்புகிற ஆண்டவரே! இறைபணியாளர் கிறிஸ்துகுமார் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுபதிக்கப்பட்டுள்ள இந்த வேளையில் குணமாக்கும் உமது வல்லமை அற்புதமாக செயற்பட்டு அவரை முழுமையாக குணப்படுத்த வேண்டும் என இறைவா உம்மை மன்றாடுகிறோம்.
 • உம்மை நாடி வந்த நோயாளர்களின் மேல் மனமிரங்கிய இயேசுஆண்டவரே! மருத்துவ பரிசோதனை செய்யவேண்டிய சகோதரி ஒருவரின் பரிசோதனைகள் சரியான முறையில் செய்யப்படவும் நல்ல பதில் கிடைக்கவும் வேண்டி உம்மிடம் மன்றாடுகிறோம்.
 • கானவூர் திருமணத்தில் அற்புதம் செய்த ஆண்டவரே! இந்த ஆண்டு திருமணத்திற்கான ஆயத்தங்களை செய்தவர்கள் கொரோனா சூழ்நிலையால் என்ன செய்வதென்று தெரியாமல் நிற்கின்றார்கள். நீரே தடைகளை அகற்றி எல்லாத் திருமணங்களையும் ஆசீர்வாதமான முறையில் நடத்தி வைக்க வேண்டுமாய் மன்றாடுகிறோம்.
 • எம்மை வழிநடத்தும் ஆவியான இறைவனே! மே மாதம் 5ம் திகதி (புதன்கிழமை)மாலை 7 மணிக்கு ஆயத்தப்படுத்தப்பட்டுள்ள சங்கிலித்தொடர் செபசேனைக்கான zoom விண்ணப்ப வழிபாடு நல்ல முறையில் நடக்கவும் அதில் பங்குபற்றுபவர்கள் நிறைவான ஆசீரைப் பெற்றுக் கொள்ளவும் வேண்டுமென ஆண்டவரே உம்மை மன்றாடி நிற்கிறோம்.
 • எங்கள் தேவைகளை நிறைவேற்றுகிற நல்ல தகப்பனே! வீடு வாங்குவதற்கு வங்கியின் மூலம் கிடைக்க வேண்டிய உதவிகள் விரைவில் கிடைக்க நீர் உதவி செய்ய வேண்டுமாய் மன்றாடுகிறோம்.
 • சமீபத்தில் மனைவியை இழந்த நிலையில் Waterloo இல் வசிக்கும் John Paul என்ற சகோதரன் சிறுநீர்ப்பை நோய் தாக்கத்தில் இருந்து(bladder infection) சுகம் பெற மன்றாடுகிறோம்.
 • நோயாளர்களின் பரம வைத்தியரே! வைத்தியருக்கெல்லாம் வைத்தியரே! நோயுற்று படுக்கையில் இருப்பவர்களை எழுந்து நடக்கப்பண்ணுகிறவரே! நோய்களை உன்னிடமிருந்து விலக்குவேன் என்ற உறுதிமொழியைத் தந்தவரே! “துன்பவேளையில் என்னை நோக்கி கூப்பிடுங்கள். உங்களைக் காத்திடுவேன்” என்றவரே! நம்பிக்கையற்ற சூழ்நிலையிலும் அற்புதம் செய்யவல்ல இயேசுவே,
 • மூளைப்புற்று நோய்(brain cancer)கடுமையாக உள்ள 51 வயதான 3 பிள்ளைகளின் தாயான நந்தினி என்ற சகோதரிக்கும்,
 • மார்பக புற்றுநோயால்(breast cancer)கடுமையான பாதிப்புக்கு உள்ளாகி இருக்கும் அற்புதம் என்ற 71 வயதான தாயாருக்கும்,

 • England இல் இரத்தப் புற்றுநோய் காரணமாக(blood cancer) வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுக் கொண்டிருக்கும் தர்மசீலன் என்ற சகோதரனுக்கும் சுகம் கொடுத்து நீண்ட ஆயுளாலும் நிறைவாழ்வினாலும் ஆசீர்வதிக்க வேண்டும் என மன்றாடுகிறோம்.

 • 17 வயதான Koade(கோடா)என்ற autism குறையுள்ள சிறுவன் Covid 19 இலிருந்து பூரணமாய் குணப்பட்ட நிலையில் நுரையீரல் தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளான். சிறுபிள்ளைகளை நேசிக்கிற அன்புள்ள ஆண்டவரே! உமது கரங்களால் இந்த சிறுவனைத் தொட்டு தெய்வீக சுகத்தை விரைவில் கொடுக்க வேண்டும் என மன்றாடுகிறோம்.
 • ஆறுதலின் தெய்வமே! கடந்த வாரத்தில் Covid 19 காரணமாக விண்ணக வாழ்வை அடைந்துள்ள குடும்பத் தலைவனின் இழப்பினால் தவிக்கும் குடும்பத்தில் தாயாருக்கும் 11 வயது சிறுவர்கள் இருவருக்கும் தொற்று ஏற்பட்டுள்ளது. மூவரும் பூரண குணமடைந்து இறந்தவரின் நல்லடக்க காரியங்களை செய்து முடிக்கவும் உமது அன்பும் அரவணைப்பும் அவர்களை பலப்படுத்தி வழிநடத்த வேண்டும் என்றும் இன்னும் இவர்களைப் போன்ற நிலையில் எல்லோருக்காகவும் உம்மிடம் மன்றாடுகிறோம்.
 • நெருக்கடி வேளையில் உம்மை நோக்கிக் கூப்பிடும்போது துன்பங்களில் இருந்து விடுவிக்கிறவரே! கொன்றொழிக்கும் கொள்ளை நோயிலிருந்தும் எங்களைத் தப்புவிக்க வல்லவரே! உம் வார்த்தைகளை அனுப்பி குணப்படுத்தி அழிவிலிருந்து விடுவிக்கிற ஆண்டவரே! புயற்காற்றை பூந்தென்றலாக மாற்றி அலைகளை ஓயப்பண்ணுகிறவரே! காற்றையும் கடலையும் அடக்கிய வல்லமை மிக்க ஆண்டவரான இயேசுவே! எங்களை வாழ வைத்த கனடாதேசம் வைரசின் மூன்றாவது அலையினால் தத்தளித்துக் கொண்டிருக்கிறது. அதேபோல் இந்தியா, இலங்கை, அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகள் மட்டுமன்றி இன்னும் பல நாடுகளும் தடுமாறிக் கொண்டிருக்கின்றன. எங்கெல்லாம் வைரஸ் தீவிரமாக இருக்கிறதோ அங்கெல்லாம் உமது பாதுகாக்கும் கரம் இறங்கி வந்து மக்களை பாதுகாக்க வேண்டும் என்று மன்றாடுகிறோம்.
 • இந்த இக்கட்டான நேரங்களில் வைத்தியசாலைகளில் பணிபுரியும் வைத்தியர்கள், தாதியர்கள், பணியாளர்களுக்காய் நன்றி சொல்லி உமது கரங்களில் தருகிறோம் அப்பா! இவர்களுக்கு நல்ல உடல்பலத்தையும் மனபலத்தையும் ஞானத்தையும் நிறைவாக கொடுத்து பாதுகாத்து கொள்ளங்கப்பா! வைத்தியசாலைகளில் உள்ள ஒவ்வொரு நோயாளிகள், உபகரணங்கள், மருந்துகள், படுக்கைகள் மேலும் உமது திருரத்தத்தை தெளிக்கிறோம். உமது திருஇரத்தத்திற்கு மேலான பாதுகாப்பு எதுவுமில்லை என்ற முழுநம்பிக்கையோடு”இயேசுவின் இரத்தம் ஜெயம்” என்று அறிக்கை செய்து மன்றாடுகிறோம்.
 • தீங்கு நாளில் உமது கூடாரத்தில் எம்மை மறைத்து வைத்திருப்பவரே! முதியோர் இல்லங்கள்,தொழிற்சாலைகள், உணவகங்கள் மற்றும் அத்தியாவசிய சேவைகள் நடைபெறும் ஒவ்வொரு இடங்களையும் அதில் பணிபுரிவோரையும் அவர்களது குடும்பங்களையும் நீரே பாதுகாக்க வேண்டும் என்று மன்றாடுகிறோம்.

 • நோயுற்றவர்களின் வைத்தியரான ஆண்டவரே! சாந்தா பாண்டியனின்(California) மாமனார் விபூஷன் COVID-19 பாதிப்புக்குள்ளாகி திருப்பூர், இந்தியாவில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவர்கள் பூரண குணமடையவும் அவரது குடும்பத்தினர் வைரசின் தொற்றிலிருந்து பாதுகாக்கப்பட்டு நல்ல ஆரோக்கியத்துடனும் இருக்க வேண்டும் என்று உம்மை இரந்து மன்றாடுகிறோம்.
 • நீடித்த நாட்களால் உங்களைத் திருப்தியாக்குவேன் என்ற தேவனே! இருதய சத்திர சிகிச்சை செய்யப்பட்ட இளம்தாயார் ஒருவருக்கு சிறுநீரகத்தில் (kidney) ஏற்பட்டுள்ள பிரச்சனை சரியாகி அவர் நல்ல உடல்சுகத்துடன் வாழும் வரமருள வேண்டுமென உம்மை மன்றாடுகிறோம்.
 • கர்ப்பப்பையில் கட்டி இருப்பதால் தொடர்ச்சியான இரத்தப்போக்கினால் அவதியுறும் சகோதரிக்கு இரத்தப்போக்கு நின்று விரைவில் சத்திரசிகிச்சை நல்லபடி நடக்க அருள்புரியவும், உம் ஆடையைத் தொட்டாலே சுகமடைவேன் என்று விசுவாசித்து சுகம் பெற்ற பெண்ணைப் போல அற்புத சுகம் பெற வேண்டுமென உம்மிடம் மன்றாடுகிறோம்.
 • சிறைப்பட்டவர்களுக்கு விடுதலை வாழ்வை கொடுக்கும் ஆண்டவரே! எமது தாயகத்தில் ஏழை எளிய மக்களுக்கு அடிப்படை உதவிகளை செய்து கொண்டிருந்த டிவன்யா என்ற இளம்தாயாரும் விமல்ராஜ் என்ற சகோதரனும் விரைவில் சிறையிலிருந்து மீண்டு தம் குடும்பங்களுடன் இணைந்து வாழ வழிசெய்ய வேண்டுமென உம்மை மன்றாடுகிறோம்.
 • அழுகையின் பள்ளத்தாக்கை மகிழ்ச்சியின் நீரூற்றாக மாற்ற வல்லவரே! Brampton ஐச் சேர்ந்த சர்மிளா என்ற 41 வயதான சிறுநீரக பாதிப்புள்ள இளம்தாயார் ஒன்றரை மாதமாக Covid-19 காரணமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு உள்ளதால் 3 வயதான அவரின் குழந்தை அழுது கொண்டிருக்கிறது. சர்மிளா விரைவில் குணமடைந்து தனது குடும்பத்தோடு நலமுடன் வாழ வேண்டுமாய் உருக்கமாக உம்மிடம் மன்றாடுகிறோம்.
 • இந்தியாவில் இறைபணிக்கு தங்களை அர்ப்பணித்த பலர் வைரஸால் பாதிக்கப்பட்டிருக்கும் இந்த நேரத்தில் உமது கரம் நீர் தேர்ந்தெடுத்த உமது ஊழியர்களையும் அவர்களின் குடும்பங்களையும் பாதுகாக்கவும் குணப்படுத்தவும் வேண்டுமென மன்றாடுகிறோம் தகப்பனே.
 • மகப்பேற்றுக்கு காரணமான சர்வ வல்லமையுள்ள ஆண்டவரே! கருவுற்றிருக்கும் தாய்மார் யாவரையும் உமது திருக்கரத்தில் முற்றுமுழுதாக ஒப்புக் கொடுக்கிறோம். சூழ்நிலைகள் எப்படியாக இருந்தாலும் நீர் இவர்களுக்கு சரியான நேரத்தில் நல்ல சுகப்பிரசவத்தை கட்டளையிட வேண்டும் என்றும் பூரண ஆரோக்கியமுள்ள குழந்தைகள் பிறக்க அருள் புரியவேண்டும் என்றும் தகப்பனே உம்மிடம் மன்றாடுகின்றோம்.

 • எனது இறக்கைகளின் கீழே ஆரோக்கியம் இருக்கும் என்ற பரம வைத்தியரே!
 • திடீரென ஏற்பட்ட நெஞ்சுவலி காரணமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட இளம்சகோதரன் உடனடியாக இருதய சத்திரசிகிச்சை செய்ய வேண்டிய சூழ்நிலையில் இருக்கிறார். நீர்தாமே அவருக்கு வைத்தியராக இருந்து சத்திரசிகிச்சையை நல்லபடி நடத்தி அவரைப் பூரண சுகத்துடன் வீடு திரும்பச் செய்ய வேண்டுமென உம்மிடம் இரந்து மன்றாடுகிறோம் அப்பா!
 • மன அமைதியின் ஊற்றே! மன நலக்குறைவுள்ள இளம்பெண் ஒருவருக்கு உடல்நலக்குறைவும் ஏற்பட்டுள்ள வேளையில் நீர்தாமே மனமிரங்கி குணப்படுத்த வேண்டும் என்று மன்றாடுகிறோம்.
 • இரண்டு கால்களிலும் கட்டி உள்ள சகோதரனுக்கு கட்டிகள் மறைந்து பரிபூரண சுகம் கிடைக்க வேண்டும் என மன்றாடுவோம்.
 • வேலை மாற்றம் செய்யவேண்டிய சூழ்நிலையில் இருக்கும் கணவன் மனைவிக்கு இருக்கும் தடைகள் நீங்கி அவர்கள் முயற்சிக்கும் தடைகள் நீங்கி அவர்கள் எதிர்பார்க்கும் வேலை கிடைக்க வேண்டும் என மன்றாடுவோம்.
 • ஈரல் சம்பந்தப்பட்ட நோயினால் பாதிக்கப்பட்டுள்ள தாயார் ஒருவர் குணமடைய வேண்டுமாய் மன்றாடுவோம்.
 • நீரிழிவு நோய் காரணமாக கால்விரல்கள் நீக்கப்பட்ட தகப்பனார் குணமடையவும் அவருடைய கால்கள் பாதுகாக்கப்பட்டு சுகமாக வாழவேண்டும் என மன்றாடுவோம்.
 • இளம்பெண் ஒருவர் வேண்டாத நண்பர்கள், பழக்கவழக்கங்களை விட்டு பெற்றோருக்கு கீழ்ப்படிந்து நல்ல எதிர்காலத்தைப் பெற வேண்டும் என்றும் அத்தோடு இளம்பெண்பிள்ளைகள் எல்லோருக்காகவும் மன்றாடுகிறோம்.
 • நோயுற்றவருக்கு மருத்துவரானவரே! Hailey என்ற 19 வயது இளம்பெண்ணுக்கு உடலில் இருந்த கட்டியை நீக்குவதற்காக ஆறு மணிநேர சத்திரசிகிச்சை நடைபெற்றுள்ளது. இந்த சத்திரசிகிச்சை இவருக்கு நல்ல பலன் கொடுத்து நிறைவான ஆரோக்கியத்தை Hailey பெற்றுக் கொள்ள வேண்டும் என்று மன்றாடுகிறோம்.
 • ஆறுதலின் தகப்பனே! Angel சிறுவன் Aiden இன் பெற்றோரும், சகோதரர்களும், உறவினர் அனைவரும் Aiden இன் இழப்பினால் ஆறாத துயரத்தின் மத்தியில் தவித்துக் கொண்டிருக்கும் இந்த வேளையில் உமது அரவணைக்கும் கரங்கள் அனைவரையும் ஆற்றி தேற்ற வேண்டும் என்றும் Aiden இன் நல்லடக்க நிகழ்வுகளுக்காகவும் உம்மை நோக்கி மன்றாடுகிறோம்.
 • சமாதானத்தின் இறைவா! இஸ்ரயேல் தேசத்திற்கும் பாலஸ்தீன தேசத்திற்கும் இடையில் மீண்டும் போர் மேகங்கள் சூழ்ந்திருக்கும் வேளையில் நீர் பொதுமக்களின் தலைக்கு கவசமாக இருந்து பாதுகாக்க வேண்டும் என்றும் நிரந்தர சமாதான சூழ்நிலையை அந்த தேசங்களுக்கு கொடுக்க வேண்டும் என்றும் மன்றாடுகிறோம்.

 • இன்றே நீர் என்னோடு வான்வீட்டில் இருப்பாய் என்ற ஆண்டவரே! Covid -19 தாக்கத்தால் உமது வீட்டிற்கு அழைக்கப்பட்ட குருமார்கள், கன்னியர்கள், விசுவாசிகள் மற்றும் எமது புதுவாழ்வுக் குழுவைச் சேர்ந்த சின்னஞ்சிறு சிட்டு Aiden மற்றும் விபூஷன் ஆகியோரை உமது சமூகத்தில் இளைப்பாற செய்ய வேண்டும் என்றும் நீர் மீண்டும் வரும்போது உம்மோடு கூட அவர்களும் காணப்பட வேண்டும் என்றும் மன்றாடுகிறோம்.
 • உமது பாதத்தில் காத்திருப்பவரகள் கழுகைப்போல புதுப்பெலன் பெற்றுக் கொள்ளப்பண்ணுகிறவரே! திருச்சி அருங்கொடை இல்லத்தின் இயக்குனராக இறைபணி செய்து கொண்டிருக்கும் அருட்தந்தை அல்பேர்ட் மற்றும் திருச்சி கலைத்தொடர்பகத்தின் பொறுப்பாளர் அருட்தந்தை தீபன் பூரண குணமடைந்து மீண்டும் பன்மடங்கு வல்லமையோடு உமது பணிகளை செய்ய துணை செய்ய வேண்டும் என்று அப்பா உம்மை மன்றாடுகிறோம்.
 • எமது பாடுகளை உமது சிலுவையில் சுமந்து தீர்த்தவரே! இந்தியாவில் Covid-19 ஆல் பாதிக்கப்பட்டு பெற்றோர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டும், பிள்ளைகள் வீட்டில் தனிமைப்படுத்தப்பட்ட நிலையிலும் இருக்கும் Davidson & Ruth குடும்பத்தையும் சென்னை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் குயின்ரன் என்ற மூன்று பிள்ளைகளின் தந்தையையும் உமது தழும்புகளல் குணப்படுத்த வேண்டும் என்றும் இதைப்போன்று கனடாவிலும் பல குடும்பங்கள் புதிதாக பாதிக்கப்பட்டு வீட்டிலும் வைத்தியசாலையிலும் இருக்கும் நிலையில் அவர்களையும் பாதுகாத்து சுகமாக்க வேண்டுமென அற்புதரே உம்மை மன்றாடுகிறோம்.
 • ஊதாரி மைந்தர்களை மனந்திரும்ப செய்ய வல்லதேவனே! அமெரிக்காவில் பெற்றோருக்கு ஒரே ஒரு மகனான இளைஞன் குடும்பத்தை விட்டுப் பிரிந்து திருமணம் செய்து வாழ்ந்து கொண்டிருக்கிறான். இதனால் தாயார் மிகுந்த மனப்பாரத்தில் தவித்துக் கொண்டு இருக்கும் நிலையை நீர் அறிவீர் ஆண்டவரே; அந்த மகனை தாயாருடன் உறவை ஏற்படுத்தி தாயாரின் துன்பநிலையை மாற்றி சந்தோசப்படுத்த வேண்டும் என்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.
 • இரக்கத்தின் இறைவா! England இல் இருக்கும் Patricia என்ற இளம் தாயார் மஞ்சள் காமாலை நோயால் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளார். இவருக்கு செய்யப்படுகிற சிகிச்சைகள் சரியான முறையில் நடக்கவும் வேறு எந்தப் பாதிப்பும் ஏற்படாமல் பாதுகாக்கப்பட்டு விரைவில் குணமடைந்து வீடு திரும்பவும் வேண்டி ஆண்டவரே உம்மிடம் மன்றாடுகிறோம்.
 • அனைத்து மக்களையும் மீட்க வந்த இயேசுவே! பல்வேறு நாடுகளில் வாழ்ந்து கொண்டிருக்கும் எமது தமிழ் மக்களுக்காக உம்மிடம் வருகிறோம் ஆண்டவரே! மன உளைச்சலுக்கு உள்ளான நிலையில் இழப்புக்கள் துயரங்களை சந்தித்து கொண்டிருக்கிறார்கள். வாழ்வை அழிக்கும் சம்பவங்களில் இருந்து ஒவ்வொருவரையும் பாதுகாத்து உமது அன்பை சுவைக்கும் அனுபவத்தை பெற்றுக்கொள்ள வரமருள வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

 • 2 பிள்ளைகளுடன் லண்டனில் வசிக்கும் சகோதரியின் கணவன் விசா கிடைத்து விரைவில் குடும்பத்தடன்இணைந்து கொள்ள வேண்டும் என்று மன்றாடுவோம்..
 • சரியாக பேச முடியாமல் இருக்கும் சிறுவனின் குறையை ஆண்டவர் குணப்படுத்தவும் இதனால் வேதனைப்படும் பெற்றோரின் மனக்கவலை நீங்கவும் மன்றாடுவோம்.
 • மிகவும் துன்பமான சூழ்நிலையில் இருக்கும் தாயும் பிள்ளைகளும் சமாதானமான பாதுகாப்பான இடத்தில் வாழ ஆண்டவர் வழிநடத்த வேண்டுமென்று மன்றாடுவோம்.
 • கான்ஸர் நோயின் தாக்கமுள்ள சகோதரிக்கு செய்யப்படவுள்ள பரிசோதனைகள் சரியானபடி நடக்கவும் பரிபூரணமான சுகம் கிடைக்கவேண்டும் என்றும் மன்றாடுவோம்.\
 • கண்ணில் செய்யப்பட்ட சத்திரசிகிச்சை பலனளிக்காத காரணத்தால் வெளிச்சத்தைப் பார்க்க முடியாமல் கண்ணீர் வழிந்தபடியும் மனமுடைந்த நிலையிலும் இருக்கும் Casey என்ற தாயார் பூரண குணமடைய மன்றாடவும்.
 • அநியாயமாக குற்றம் சாட்டப்பட்டு பல ஆண்டுகளாக சிறையில் இருக்கும் இளைஞன் விரைவில் விடுதலை பெறவும் அத்தோடு எமது தாயகத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்களின் விடுதலைக்காகவும் மன்றாடவும்.
 • இடுப்பு எலும்பு முறிந்ததால் நடக்கமுடியாமல் இருக்கும் சகோதரி Eleanor பூரண குணமடைந்து மீண்டும் தனது பணியைத் தொடரவேண்டும் என மன்றாடுவோம்
 • கனடா வருவதற்கான விசாவிற்காக காத்திருப்பவர்களுக்காக மன்றாடவும்.