அருங்கொடை செபம் பல படி முறைகளைக் கொண்டுள்ளது.
- ஆரம்ப செபம்,
- புகழ்ச்சி செபம்,
- ஆராதனை செபம்,
- பாவ மன்னிப்பு செபம்,
- மன்றாட்டு செபம்,
- நன்றி செபம்,
- முடிவு செபம்.
ஆரம்ப செபம்:
ஆரம்ப செபம் செப வழிபாட்டின் ஆரம்ப செபமாகும். இச்செபத்தில் தூய ஆவியாரின் துணை வேண்டியும், செப வழிபாட்டையும் அதில் பங்கு பெறுவோர் மற்றும் செப வழிபாட்டை நடத்தபவர்கள் அனைவரையும் இறைவனின் வழிநடத்துதலில் அர்ப்பணித்து செபித்தல் ஆகும்.
அத்துடன் செபவழிபாட்டில் கடவுளின் வல்ல செயல்களுக்காவும் செபித்தல் ஆகும்.
புகழ்ச்சி செபம்:
புகழ்ச்சி செபம், இறைவனைப்பற்றி எடுத்துரைத்து கடவுளைப் புகழ்வதாகும். கடவுளின் குணங்கள் என்ன, கடவுள் எமக்குக் கூறிய வாக்குத் தத்தங்கள் என்ன, கடவுளின் செயல்கள் என்ன என்பதை எடுத்துரைத்து எல்லாம் வல்ல இறைவனை மாட்சிப் படுத்துதல் ஆகும்.
ஆராதனை செபம்:
அராதனை செபம், புகச்சி செபத்தின் வழியாக நாம் பெற்றுக்கொண்ட இறை பிரசன்னத்தில் அமைதியாக கடவுளை வணங்குதலும், கடவுளிடம் எம்மை அர்ப்பணித்தலும் ஆகும்.
பாவ மன்னிப்பு செபம்:
பாவ மன்னிப்பு செபம் எமது பாவங்களை அறிக்கை செய்து இறைவனிடம் மன்னிப்பு வேண்டி செபிப்பதோடு, நாம் தூய்மையாய் வாழ இறைவனின் துணை கேட்டு செபித்தலாகும்.
மன்றாட்டு செபம்:
மன்றாட்டு செபம் என்பது எமது தேவைகளுக்காக இறைவனிடம் மன்றாடும் செபமாகும்.
நன்றி செபம்:
நன்றி செபத்தின் மூலம் இறைவன் எம்மை வழிநடத்தி வருவதற்காகவும், இறைவன் செய்த நன்மைகளுக்காகவும், எமது மன்றாட்டை கேட்டமைக்காவும் கடவுளுக்க நன்றி கூறி செபித்தல் ஆகும்.
முடிவு செபம்:
செப வழிபாட்டின் தொடக்கம் முதல் முடிவு வரை இறைவன் எம்மை வழி நடத்தியதிற்காக இறைவனுக்கு நன்றி கூறி வழிபாட்டை நிறை வேற்றுதல் ஆகும்.
புகழ் மாலை
1. இஸ்ரயேலின் கடவுளே உம்மை போற்றுகிறோம்
2. இரக்கம் நிறைந்த கடவுளே உம்மை துதிக்கிறோம்
3. இரக்கமிகு இறைவனே உம்மை போற்றுகிறோம்
4. இல்லாதவற்றை உம் வார்த்தையால் இருக்கச் செய்கிறவரே உம்மை போற்றுகிறோம்
5. ஈசாக்கின் கடவுளே உம்மை போற்றுகிறோம்
6. யாக்கோபின் கடவுளே உம்மை போற்றுகிறோம்
7. நீதி அருள்கின்ற கடவுளே உம்மை போற்றுகிறோம்
8. நீதியுள்ள தந்தையே உம்மை துதிக்கிறோம்
9. படைகளின் கடவுளாகிய ஆண்டவரே உம்மை போற்றுகிறோம்
10. மன்னிக்கும் கடவுளே உம்மை போற்றுகிறோம்
11. மாட்சிமிகு கடவுளே உம்மை போற்றுகிறோம்
12. மாட்சிமிகு தந்தையே உம்மை துதிக்கிறோம்
13. மாண்புமிகு இறைவனே உம்மை போற்றுகிறோம்
14. மறைபொருணை வெளிப்படுத்தும் தேவனே உம்மை போற்றுகிறோம்
15. மீட்பராம் கடவுளே உம்மை போற்றுகிறோம்
16. அன்பின் கடவுளே உம்மை போற்றுகிறோம்
17. அன்பின் தந்தையே உம்மை துதிக்கிறோம்
18. அப்பா தந்தையே உம்மை துதிக்கிறோம்
19. ஆபிரகாமின் கடவுளே உம்மை போற்றுகிறோம்
20. அருகாமைக்கும் தொலைவுக்கும் கடவுளே உம்மை போற்றுகிறோம்
21. அருஞ்செயல் ஆற்றும் தெய்வமே உம்மை போற்றுகிறோம்
22. அரசாளுகின்ற கடவுளே உம்மை போற்றுகிறோம்
23. பெயர் சொல்லி அழைக்கும் இறைவா உம்மை போற்றுகிறோம்
24. தேவைகள் அனைத்தும் நிறைவு செய்யும் தேவனே உம்மை போற்றுகிறோம்
25. வெற்றியைக்கொடுக்கும் கடவுளே உம்மை போற்றுகிறோம்
26. வாக்குத்ததங்களின் தேவனே உம்மை போற்றுகிறோம்
27. வாழும் தந்தையே உம்மை துதிக்கிறோம்
28. வியத்தகு ஆலோசகரே உம்மை துதிக்கிறோம்
29. விண்ணகத் தந்தையே உம்மை துதிக்கிறோம்
30. வலிமைமிகு இறைவனே உம்மை போற்றுகிறோம்
31. என் நம்பிக்கையும் மீட்பருமாகிய இறைவா உம்மை போற்றுகிறோம்
32. என் ஆற்றலானவரே உம்மை போற்றுகிறோம்
33. என்னைக் காண்கின்ற இறைவா உம்மை போற்றுகிறோம்
34. என்றென்றும்,எல்லாத் தலைமுறைக்கும் ஆட்சி செய்யும் கடவுளே உம்மை போற்றுகிறோம்
35. எங்களை ஒளிர்விக்கின்ற தேவனே உம்மை போற்றுகிறோம்
36. எங்களைப் படைத்த தெய்வமே உம்மை துதிக்கிறோம்
37. எங்கள் விண்ணப்பத்திற்கு பதில் அளிக்கும் தேவனே உம்மை போற்றுகிறோம்
38. எல்லாம் வல்ல இறைவனே உம்மை போற்றுகிறோம்
39. ஒளியின் பிறப்பிடமே உம்மை துதிக்கிறோம்
செபம் என்றால் என்ன?
இறைவனுடன் இறைமக்கள் கொள்ளும் உறவே செபம். இறை மக்களுடைய உள்ளமும் இறைவனுடைய உள்ளமும் ஒன்றிக்க வேண்டும். ஒன்றியத்துக்கு மிக அவசியம் உரையாடல். உரையாடுவதால் உறவு கொள்ள முடிகிறது. உறவினால் இரு உள்ளங்கள் ஒன்றாய் இணையவும் இயங்கவும் செய்கின்றன. மூவொரு இறைவனோடு நாம் கொள்ளும் உறவே செபமாகும்.
நம்மை தன் சாயலாக படைத்து பாதுகாத்து பேணிவரும் தந்தையின் அளவற்ற அன்பை உணரும்போது அப்பா தந்தாய் அனுபவம் ஏற்படுகிறது.
இறைமகன் இயேசு தன் பாடுகளினாலும், மரணத்தினாலும், உயிர்ப்பாலும் மீட்டு இரசித்தார் என்ற உணர்வு வரும்போது இயேசுவே ஆண்டவர் என்று அனுபவம் ஏற்படுகின்றது.
நம்முடைய சீரழிந்த நிலையில் நம்மை அர்ச்சித்து தூய்மையாக்கி புண்ணியத்தில் தூய ஆவியானவர் வழி நடத்துகிறார் என்று உணரும்போது பெந்தகோஸ்து அனுபவம் பெறுகிறோம்.
இந்த இறை அனுபவமே இறை உறவை உருவாக்குகின்றது. நம் வாழ்வை முழுமையாக மாற்றி அமைக்கும் ஆக்க சக்தியாக மாறுகின்றது.
செபமே நிம்மதி இழந்த மனித உள்ளத்துக்கு நிம்மதியான சரணாலயம்.
வாழ்வின் பயணத்தில் திக்கற்று தவிக்கும் மனிதருக்கு வழிகாட்டி செபம்.
துன்பத்தில் துவளும் நெஞ்சங்களுக்கு ஆறுதலின் பிறப்பிடம் செபம்.
மனம் வலிமையற்று வாழ்வை இழந்து பரிதவிக்கும் மனிதனுக்கு நித்திய வாழ்வை அழிக்கும் வாய்க்கால் செபம்.
இருள் சூழ்ந்த உலகிலே அருள் வாழ்வை பெற்று தருவது செபம்.
மனித உள்ளங்களை இறைவனோடு இணைக்கும் பாலம் செபம்.
நம்மை இறை சாயலை தாங்கிய மறு கிறிஸ்துவாக மாற்றுவது செபம்.